முன்னாள் தளபதி கிரிக்கெட்டின் தலைமை ஆலோசகராக நியமனம்!!

இலங்கை கிரிக்கெட்டின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் விமானப்படை தளபதி ரோஷன் குணதிலகவை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

அந்தவகையில் இவரது புதிய நியமனம் 2019 ஆம் ஆண்டு மே 17 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அனைத்து வகையான கிரிக்கெட்டையும் (இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு , வெளிநாட்டு பயணங்களின்போது பாதுகாப்பு , மைதானங்களில் பாதுகாப்பு ) உள்ளடக்கிய பாதுகாப்பு திட்டத்தை வலுப்படுத்துவதற்காக இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

1978 இல் விமானியாக இலங்கை விமானப்படையில் சேர்ந்த ரோஷன் குணதிலக, எயர் சீஃப் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டார்.

பின்னர் விமானப்படைக்கு கட்டளை தளபதியாகவும் அதன்பிறகு பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவராக என இலங்கை பாதுகாப்பு துறையில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா “நான் உறுதியாக நம்புகிறேன், அவரது நுழைவு பாதுகாப்புத் திட்டத்தை பலப்படுத்தும், எமது கிரிக்கெட் போட்டிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என நாங்கள் நம்புகின்றோம்.

எந்தவொரு கிரிக்கெட் போட்டியின்போதும் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஏனெனில் பாதுகாப்பான சூழலைக் கொண்டிருப்பது அணிகள் மற்றும் வீரர்களுக்கு போட்டியில் ஆரோக்கியமாக ஈடுபட உதவுகிறது” என கூறினார்.


Recommended For You

About the Author: Editor