இறந்த 39 பேரின் புகைப்படம்- எங்கும் கை ரேகை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனை உலுப்பிய சம்பவம் யாவரும் அறிந்ததே. இறந்த 39 பேரும் சீனர்கள் என்று தெரியவந்துள்ள நிலையில்.

அவர்களில் சிலர் கண்டேனரை உடைத்து வெளியே வர பல முயற்சிகளை எடுத்துள்ளார்கள் என்று தெரியவருகிறது. கண்டேனரின் கதவுகளை திறக்கவும், அத்தோடு அதனை உடைக்கவும் இறந்தவர்களில் சிலர் முயன்றுள்ளார்கள்.

அவர்களது கை ரேகைகள் கண்டேனரின் கதவுகளில் உள் புறமாக இருக்கிறது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை மோபைல் போனை வைத்திருந்த பெண் ஒருவர். அம்மா நான் மெல்ல மெல்ல இறக்கிறேன். இங்கே காற்று இல்லை என்னால் சுவாசிக்க முடியவில்லை என்ற தகவலை மோபைல் போனில் பதிவு செய்துள்ளார். இதுவே அவரது இறுதித் தகவல்.

இது இவ்வாறு இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக இறந்து போன நபர்களின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் இச் சம்பவம் தொடர்பாக சீனா எதனையும் பெரிதாக தெரிவிக்கவில்லை. அலட்டிக் கொள்ளவும் இல்லை என்பது உலகை அதிரவைத்துள்ள விடையம் ஆகும்.


Recommended For You

About the Author: Editor