சஜித்தின் பிரதமர் குறித்து வெளியான தகவல்!

சஜித் பிரேமதாச ஜனாதிபதியான பின்பு அவரின் பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்வது தொடர்பாக அவருக்கு முழு சுதந்திரம் உள்ளதென அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சஜித் பிரேமதாச, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமல், திறமையான, தொழில்முறை மற்றும் வேலை செய்யக்கூடிய ஒரு இளைஞரை புதிய பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க மிகவும் போராடியவர்களில் மிக முக்கியமான நபர்களில் நானும் ஒருவன் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சஜித் தேர்தெடுக்கும் அந்த பிரதமர் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத திறமையான, தொழில்முறை மற்றும் திறமையான இளைஞன் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் தான் சொல்கிறேன் எனவும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor