சஜித்தே மக்கள் எதிர்பார்க்கும் தலைவர் – ஹரிசன்!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான் மக்கள் எதிர்பார்க்கும் தலைவரென நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹரிசன் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து பண்புகளும் சஜித் பிரேமதாஸவிடமே காணப்படுகின்றது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாகனங்களை கொள்வனவு செய்யும்போது வழங்கப்படும் சிறப்பு சலுகையை இரத்து செய்வதாக அவர் கூறியுள்ள விடயம் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.

அந்தவகையில் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சஜித் நிச்சயம் அவரை அர்ப்பணிப்பார்.

எனவேதான் பெரும்பாலான கட்சிகள், சஜித்துக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor