தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சில தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் மாதிரி வாக்கெடுப்புக்கள் இடம்பெறுகின்றமை தொடர்பில் தெரியவந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் அதன் பெறுபேறுகள் சமூகவலைத்தளங்களிலும் வெளியிடப்படுகின்றதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் அவை ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு முரணானது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனவே இவ்வாறான மாதிரி வாக்கெடுப்புக்களை நடத்த வேண்டாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு உரிய தரப்புக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


Recommended For You

About the Author: Editor