நாடாளுமன்றத்தின் ருவிற்றர் கணக்கிற்கு இணைய வழி தாக்குதல்

நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ ருவிற்றர் கணக்கிற்கு இணைய வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 25 நிமிடங்கள் இணைய வழி தாக்குதலாளிகள் அதனை கையகப்படுத்தியிருந்தாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, அந்த பக்கத்தில் தரவேற்றியிருந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாக அந்த பக்கத்தில் ஆபாசபடங்கள் பதிவேற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்ற தொலைத்தொடர்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக அந்த ருவிற்றர் கணக்கின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியதாக அந்த பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, அந்த கணக்கில் தரவேற்றப்பட்டிருந்த ஆபாச படங்களும் அகற்றப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்