யாழில் பிரபல தியேட்டருக்கு நேர்ந்த கதி!!

தீபாவளியையொட்டி இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் நேற்று பிகில் திரைப்படம் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்கில் “பிகில்” திரைப்படம் திரையிடப்படவிருந்த நிலையில், அதிகாலையே அங்கு விஜய் ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

இந்நிலையில் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போன விரக்தியில் திரையரங்கை அடித்து சேதப்படுத்தினர்.

மேலும், திரையரங்கினுள் புகுந்து ஸ்க்ரீனையும் சேதப்படுத்தியதோடு திரையரங்கு ஊழியர்களையும் தாக்கிவிட்டு கேட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதேவேளை பொழுது போக்கான ஒரு விடயத்திற்காக இளைஞர்கள் இவ்வாறான அடாவடி செயல்களில் ஈட்டுள்ளமைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor