சிரியாவுக்கு துருப்புக்களை அனுப்பிய ரஷ்யா.

வடகிழக்கு சிரியாவில் துருக்கியின் இராணுவ ஊடுருவலை தடுத்து நிறுத்திய அங்காரா மற்றும் மொஸ்கோ இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா தனது துருப்புக்களை சிரியாவிற்கு அனுப்பியுள்ளது.

அந்தவகையில் ரஷ்யா, சுமார் 300 இராணுவ பொலிஸாரையும் 20 க்கும் மேற்பட்ட கவச வாகனங்களையும் சிரியாவிற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிகளான தயிப் எர்டோகன் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோரால் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில் ரஷ்ய இராணுவமும் சிரியாவின் எல்லை பாதுகாவலர்களும் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் துருக்கிய எல்லையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள அனைத்து குர்திஷ் போராளிகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யா தனது துருப்புக்களை சிரியாவிற்கு அனுப்பியுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்