வீடு உடைத்து கொள்ளை – நால்வருக்கு விளக்கமறியல்.

மட்டக்களப்பு- கள்ளியங்காடு பகுதியில் வீடொன்றின் கதவை உடைத்து அங்கிருந்த மடிகணனி மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்ட 4 இளைஞர்களையும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

குறித்த நான்கு சந்தேகநபர்களையும் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான்ஏ.சி.றிஸ்வான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்

மட்டக்களப்பு- கள்ளியங்காடு வீதியிலுள்ள குறித்த வீட்டில் தங்கியிருந்து மின் உபகரணங்களை விற்பனை செய்து வருபவர், சம்பவத்தினமான நேற்று முன்தினம், அறையை பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பி வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு மின் உபகரணங்கள் திருட்டு போனதை அவதானித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் அவர் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

அதனடிப்படையில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்தப்போது, இருதயபுரம், கூளாவடி, கள்ளியங்காடு, திருகோணமலை வீதியைச் சோந்த 22, 21, 23. வயதுடைய 4 பேரை கைது செய்ததுடன் அவர்கள் ஏனையோருக்கு விற்பனை செய்த மின் உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே அவர்களை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்