பரிசை நோக்கி வந்த விமானத்தில் தீ சமிக்ஞை எழுந்ததால் பரபரப்பு..!!

பரிசை நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் திடீரென தீ பரவுவதாக சமிக்ஞை ஒலி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Air France நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சீனாவின் Beijing நகரில் இருந்து புறப்பட்டது.

3 விமானிகள் 11 விமான பணிப்பெண்கள் உட்பட 352 பயணிகள் விமானத்தில் இருந்தனர். அதிகாலை 1:30 மணிக்கு விமானம் அங்கிருந்து பரிசை நோக்கி புறப்பட்டது.

ஆனால் சில நிமிடங்களில் விமானத்தில் தீ பரவுவதாக சமிக்ஞை ஒலி எழுந்துள்ளது. இதனால் விமானத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர்.

இன்று 14:30 மணிக்கு சாள்-து-கோல் விமான நிலையத்தில் குறித்த AF125 விமானர் தரையிறங்க திட்டமிட்ட நிலையில், உடனடியாக திருப்பப்பட்டது. ஆனால் விமானத்தில் தீ எதுவும் பரவியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Recommended For You

About the Author: Editor