தமிழ் மக்களுக்கு எதை பெற்றுக்கொடுக்கப் போகிறார்கள்?

2009ஆம் ஆண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் எமது இனத்தினை அழித்தவர்களுக்கு ஆதரவாக இன்று தேர்தல் பிரசாரத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று நம்பிக்கொண்டிருக்கின்றவர்கள் செயற்படுகிறார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாங்கள் எதைப்பற்றிப் பேசி தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதை மிகத் தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “2009ஆம் ஆண்டு இந்த நாட்டில் தமிழ் மக்களை பாரியளவில் கொன்று குவித்தவர்கள் மீண்டும் ஒருமுறை இந்த நாட்டில் காலூன்றுவற்கான சந்தர்ப்பங்களை காணமுடியும்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வினை இதுவரையில் காணாத நிலையில் எங்களை அழித்தவர்கள் இன்று போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் நலன், எவ்வாறான தீர்மானத்தினை இன்றைய நிலையில் மேற்கொள்வது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமாக ஆராய்ந்து எடுக்கும். அதனை தமிழ் மக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor