மாதா சொரூபத்திற்கு நேர்ந்த அசம்பாவிதம்!!

யாழ்ப்பாணம் – மணியம்தோட்டம் பகுதியில் இருந்த மாதா சொரூபம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த அசம்பாவிதம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மீன்பிடி தொழிலுக்காக அந்த பகுதிக்கு வந்த சிலர் சொரூபம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

அரியாலை, மணியம்தோட்டம் கடற்கரை பகுதியில் வேளாங்கன்னி மாதா சொரூபத்தை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்தோம். நள்ளிரவு வரை அந்த சொரூபம் அழகான தோற்றத்துடன் காட்சியளித்தது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை வைத்து மதங்களுக்கிடையேயும், இனங்களுக்கிடையேயும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் நோக்கத்துடன், இந்த சிலை உடைக்கப்பட்டுள்ளது.

பல முறை இந்த சிலை அடையாளம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தொடர்ச்சியாக இடம்பெறும் இந்த சிலை உடைப்பு சம்பவங்களை கண்டிக்கின்றோம்.

சிலை உடைத்தவர்களை இனங்கண்டு உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


Recommended For You

About the Author: Editor