500 பேர் தயாரித்த கோத்தாவின் தேர்தல் அறிக்கை இன்று!!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு- நெலும் பொக்குண அரங்கில் இன்று காலை 9.30 மணியளவில் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

ஒட்டுமொத்த நாட்டுக்குமான தேர்தல் அறிக்கையாகவும், ஒவ்வொரு மாகாணங்களுக்குத் தனித்தனியானதாகவும் தேர்தல் அறிக்கையாகவும், இரண்டு விதமான தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

500 வல்லுனர்களைக் கொண்ட, 28 நிபுணத்துவக் குழுக்களினால் இந்த தேர்தல் அறிக்கை வரையப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor