நண்பியின் ஆபாச படத்தை பதிவேற்றிய நண்பி கைது.

பியகம பகுதியில் போலி பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி நண்பியின் ஆபாச படங்களை பதிவேற்றிய இளம் யுவதியை பியகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது கையடக்க தொலைபேசி இலக்கத்திலிருந்து போலி முகநூல் பக்கமொன்றை உருவாக்கியே அவர் படங்களை பதிவேற்றியதுடன், தனது நண்பிக்கு ஆபாச அழைப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்.

இராணுவத்திலிருந்து விலகி வந்த 26 வயதான இளம்பெண்ணொருவரே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய இரண்டு நண்பிகளிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே, இந்த சம்பவம் இடம்பெற்றது. 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் படங்களே இவ்வாறு பதிவேற்றப்பட்டன.

படங்களை பார்த்த நண்பர்கள், படங்களிற்குரிய பெண்ணிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விடயத்தை தெரிவித்த பின்னரே, அவர் தனது படங்கள் இவ்வாறு பதிவேற்றப்பட்டுள்ளதை அவர் அறிந்துகொண்டார். இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதையடுத்து, படங்களை பதிவேற்றிய யுவதியை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்