கிளிநொச்சி ஆயுத அகழ்வு பணி இடைநிறுத்தம்!!

கிளிநொச்சியில், விடுதலைப் புலிகளின் வெடிப்பொருட்கள் இருப்பதாகக் கருதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

எந்தவிதமான வெடிபொருட்களும் கண்டெடுக்கப்படாத நிலையில் அகழ்வு பணி நிறுத்தப்பட்டது.

கிளிநொச்சி – வட்டக்கச்சி விவசாயப் பண்ணைக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) பகல் அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தன.

குறித்த முகாமில் விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் அடங்கிய கொள்கலன் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து அகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் நீதவான் பார்வையிட்டு அனுமதி வழங்கியதன் பின்னர் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor