திருமலை பேரூந்து நிலைய வாசலில் புதிதாய் முளைத்த புத்தர்!!

திருகோணமலை பேரூந்து நிலைய வாசலில் புதிதாய் முளைத்திருக்கும் புத்தர் சிலை. காவித் திருடர்கள் நிலங்களைத் திருடப் பயன்படுத்தும் கருவிதான் இந்த வெள்ளைப் புத்தர் சிலைகள்.

ஏற்கனவே 2005இல் பேரூந்து நிலையத்தின் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை பல பிரச்சினைகளை ஏற்படுத்தி இன்னும் அங்கேயே இருக்கிறது.

காவிகள் இப்போது புதிதாய் இன்னொன்றை வைத்து இருக்கிறார்கள்.

நாளை திருகோணமலை நகரமும் புனித பூமி என பேரினவாதம் வந்து நிற்பதற்கு தொடர்ச்சியாகச் செய்யும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று.

ஆக்கிரமிப்பு நோக்கில் வைக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சிக்கு வன்மையான கண்டனங்கள். சிலையை அகற்ற நகரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும்.


Recommended For You

About the Author: Editor