கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது!!

கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகம் இணைந்து முல்லைத்தீவு, புதுமாதலன் கடற்கரையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அனுமதிபத்திரம் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 12 பேர் கைது செய்யபட்டனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் முல்லைதீவு உதவி மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகம் இணைந்து 2019 அக்டோபர் 22 அன்று திருகோணமலை முல்லைத்தீவு, புதுமாதலன் கடற்கரையில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு சட்டவிரோதமாக பிடித்த 2300 கடல் அட்டைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 04 டிங்கி படகுகள், 04 வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் 36 முதல் 40 வயதுக்குட்பட்ட கற்பிட்டி மற்றும் திருகோணமலை பகுதியில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், மீன்பிடிப் படகுகள், வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள், கடல் அட்டைகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களை மேலதிக விசாரணைகளுக்காக முல்லைதீவு மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், அதே தினத்தில் கடற்படையால் திருகோணமலை, நல்லூர் கடற்கரையில் மற்றும் மன்னார் வன்காலே பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த மற்றும் கொண்டு சென்ற 11 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு 340 கிலோ கிராம் கடல் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.


Recommended For You

About the Author: Editor