30000 பேர் மரணத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிக்கை

வடகொரியாவில் 11 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமர்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது அந்நாட்டுச் சனத்தொகையில் அரைவாசியாகும் என மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன புலனாய்வாளர் தோமஸ் ஒஜியா குயின்டானா ஐக்கிய நாடுகள் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ரூபவ் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் சிறுவர்களும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 30 ஆயிரம் பேர் மரணத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் ரூபவ் உற்பத்திக்கு ஏற்புடைய பயிர் நிலம் இல்லாமை ரூபவ் இயற்கை பேரழிவுகள் மற்றும் வடகொரியா மீதான பொருளாதரத் தடையால் ஏற்படுகின்ற பொருளாதார தாக்கங்களும் இந்நிலைமைக்குக் காரணமாகும்

வடகொரியா எதிர்நோக்கியுள்ள இந்த அசாதாரண பிரச்சினையிலிருந்து உடனடியாக மக்களைக் காப்பாற்றுவதற்கு பேதங்களை தவிர்த்து உலக நாடுகள் முன்வர வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


Recommended For You

About the Author: Editor