இளவரசர் சார்லஸ் வேல்ஸ் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு!!

உலக கிண்ண ரக்பி தொடரின் அரையிறுதி போட்டியில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள வேல்ஸ் வீரர்களுக்கு, பிரித்தானிய இளவரசர் சார்லஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான ரக்பி அரையிறுதி போட்டி ஜப்பானின் Yokohama நகரில் எதிர்வரும் ஞாயிற்று கிழமை நடைபெறவுள்ளது.

இதில் தென் ஆப்ரிக்கா அணியும், வேல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

இந்தநிலையில் ஜப்பானில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேல்ஸ் அணியை நேரில் சந்தித்த வேல்ஸ் இளவரசர் சார்லஸ், வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்போது அணியின் தலைவர் Alun Wyn Jones இளவசருக்கு அணியின் சீருடை ஒன்றினை பரிசளித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor