குழப்பக்கதைகளை நம்ப வேண்டாம்-டக்ளஸ்!!

13 ஐ கோட்டபய ஏற்றுக்கொள்வார்: தமிழ் மக்களுகளின் பிரச்சினைகளுக்கு அதனூடாகவே தீர்வு – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு

தமிழ் மக்களை தேவையற்ற கதைகளையோ பரப்புரைகளையோ செய்து ஏமாற்றிக்கொண்டிராது தெளிவான நேர்மையான கருதுக்களையும் வாக்குறுதிகளையும் கூறி அவர்களது வாக்குகளை பெற்று பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தற்போது மக்களது ஆதரவை இழந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களை ஏமாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஒரு நாடகம் தான் தற்போதைய ஐந்து கட்சிகளின் கூட்டும் அவர்கள் முன்வைத்துள்ள 13 நிபந்தனைகளும்.

இந்த 13 நிபந்தனைகளையும் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஆனால் அந்த 13 ஐ கையிலெடுத்துள்ள தமிழ் கோட்டமைப்பினரும் அவர்களின் சார்பு சில ஊடகங்களும் மக்களை ஒரு குழப்ப நிலைக்குள் வைத்திருப்பதற்காக 13 க் கோரிக்கையை கோட்டபய நிராகரித்துவிட்டார் என தவறான பிரசாரம் செய்ய முற்படுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இவ்வாறான சுயலாப அரசியல் செயற்பாடுகளால் தான் எமது மக்கள் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.

அதேபோல மன்னார் மாவட்ட மக்களை பல வகையிலும் தமிழ் அரசியல் வாதிகள் ஏமாற்றி வருகின்றனர். அவர்களது சுயநலன்கள் வெல்வதற்கு தமிழ் மக்கள் இனியும் இடமளிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

நாம் செய்வதையே சொல்வோம் சொல்வதையே செய்வோம். இதுதன் எமது கடந்தகால வரலாறு. அதனால்தான் நாம் தமிழ் மக்களிடம் நீண்டகாலமாக கூறிவருகின்றோம் எமது வழி நோக்கி அணிதிரண்டு எமது கரங்களுக்கு அரசியல் அதிகாரங்களை தாருங்கள் என்று.

தமிழ் மக்களுக்கு தற்போது சிறந்ததொரு சந்தர்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் சரியாக பயன்படுத்தி நாம் ஆதர்வு தரக்கோரும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களுக்கு உங்களது வாக்கிகளை வழங்கி அவரை வெற்றிபெறச் செய்யுங்கள்.

எமக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராயபக்ஷவுக்கும் இடையே நீண்டகால புரிந்துணர்வு உள்ளது. இதனால் தான் நாம் கூறுகிறோம் செய்வோம் செய்விப்போம் என்று.

அந்தவகையில் கோட்டபய ராயபக்ஷ அவர்களின் வெற்றியில் நாமும் பங்கெடுப்போமானால் அந்த வெற்றியில் நாமும் பங்காளர்களானால் அவரூடாக நாம் 13 ஆவது தீர்வு திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன் தமிழ் மக்களிம் அதிகளவான் பிரச்சினைகளுக்கும் நச்ம் தீர்வுகண்டுதருவோம் என்றார்.

மன்னார் தாழ்வுப்பாடு பகுதியில் இபெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor