முப்படையினர் நாடு முழுவதும் அதிவிசேட வர்த்தமானி

பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் பொருட்டு முப்படையினரை நாடு முழுவதும் அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கையொப்பத்துடன் நேற்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நிர்வாக மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்மாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் மற்றும் நாட்டுக்கு உரித்தான கடல்பகுதி உள்ளடங்கிய கடற்கரை ஆகியனவும் இதில் உள்ளடங்கும்.

மேலும், கண்டி, மாத்தளை, கிளிநொச்சி, வவுனியா, குருணாகலை, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொணராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களும் இதற்குள் உள்ளடங்கும்.

பொது சேவைக்காக குறிப்பிடப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவையும் நாட்டுக்கு சொந்தமான கடல்பகுதி உள்ளடங்கிய கடற்கரை ஆகியனவும் இந்த வர்த்தமானிக்குள் உள்ளடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor