அம்பாறையில் முதலைகளால் அச்சுறுத்தல்!!

அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதால் அப்பகுதியால் செல்வதற்கு பிரதேசவாசிகள் அச்சப்படுகின்றனர்.

அண்மை காலமாக சீரற்ற காலநிலை நிலவுவதோடு அதிக மழையும் பெய்துவருகின்றது.

இதன் காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் சுமார் 9, 5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கினறனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் கிட்டங்கி, அன்னமலை, மாவடிப்பள்ளி, இறக்காமம், சின்ன முகத்துவாரம், சாகாமக்குளம் ,கஞ்சி குடிச்சாறு, தாமரைக்குளம், பொத்துவில் ,களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன.

மேற்படி பகுதிகளில் உள்ள வாவிகளிலும், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

எனினும் குறித்த நீர்நிலைகளிலும் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்களோ எச்சரிக்கை பலகைகளோ இதுவரையும் வைக்கப்படவில்லை என்றும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அபாயம் தெரியாமல் மீனவர்களும் சுற்றுலாப்பயணிகளும் வாவிகளிலும் குளங்களிலும் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளானர்.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor