நல்லெண்ணெயில் சமைப்போம்

நல்லெண்ணெயில் அதிக அளவில் பல்நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (ஒமேகா 6) உள்ளது. இது ரத்தக் குழாய் திசுக்களை அமைதிப்படுத்தி, ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது.

உங்கள் உணவை நல்லெண்ணெயில் சமைப்பதன் மூலம் ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் நல்லெண்ணெய்க்கு உள்ளது எனப் பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தவிர, மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, மூட்டு வலிகள் போன்றவற்றை எதிர்த்து ஆற்றல் புரியும் தன்மையும் நல்லெண்ணெய்க்கு உண்டு.


Recommended For You

About the Author: Editor