மலையக மக்களின் எதிர்கால நலன் சஜித் பிரேமதாச

மலையக மக்களின் எதிர்கால நலன் கருதியே தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் அமைச்சர் அவர்கள் இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்க தீர்மானித்துள்ளார்

எமது மலையக எதிர்கால சந்ததியினர் மகிழ்ச்சி காரமாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டுமென்றால் அதற்குரிய பொருத்தமான ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் அந்த வகையில் கடந்த காலங்களில் குடும்ப ஆட்சியை நடாத்திய ராஜபக்ச குடும்பத்தினரை மீண்டும் ஜனாதிபதியாக கொண்டுவரும் பட்சத்தில் பல்வேறுவகையான சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் மலையக மக்கள் நிச்சயமாக முகம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர்

ஆகவே மக்களின் எதிர்கால நலன் கருதி அமைச்சர் பழனி திகாம்பரம் சரியானதொரு முடிவை எடுத்துள்ளார் இதுபோல் மலையகத்தின் தலைவர்கள் சரியான முறையில் சிந்தித்து செயற்பட வேண்டும் என தேசிய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நான் கேட்டுக்கொள்கின்றேன்.

தற்போது மலையகத்தில் சகலரும் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகின்றனர் இதற்கு காரணம் நல்லாட்சியை எனவே இனி வரும் காலங்களிலும் நாம் அனைவரும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டுமென்றால் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வரவேண்டும்

அதற்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை தற்போது மலையகம் எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்க அந்த வகையில் இன்றைய தினம் டயகம மூன்றாம் பிரிவு பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அன்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்ய வேண்டும் இதன் மூலம் எதிர்காலத்தில் மலையகத்துக்கு மேலும் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.( லிந்துல. சுரேஷ்


Recommended For You

About the Author: Editor