பெட்ரோலால் நேர்ந்த விபரீதம்!

பிரேசில் நாட்டில் கரப்பான் பூச்சிகளைக் கொல்வதற்கு வைத்த நெருப்பினால் நிலப்பகுதி வெடித்துச் சிதறிய வீடியோ வெளியாகி உள்ளது.

எனியாஸ் என்ற இடத்தைச் சேர்ந்த சீஸர் செமிட்ஸ் என்பவர் வீட்டில் கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் துளை ஒன்றில் பெட்ரோலையும், பூச்சிக் கொல்லி மருந்தையும் ஒன்றாக ஊற்றி உள்ளார்.

அப்படியும் கரப்பான் பூச்சிகள் சில உயிருடன் உலாவிக் கொண்டிருந்ததால், பெட்ரோல் மீது சில தீக்குச்சிகளை உரசிப் போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென குறிப்பிட்ட நிலப்பகுதி வெடித்துச் சிதறியது.

இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்ற போதிலும், கரப்பான் பூச்சிகள் கழிவுகளை குழிக்குள் அதிகமாக சேர்த்து வைத்திருந்ததால் அதில் மீத்தேன் வாயு உற்பத்தியானதால் இந்த வெடிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.


Recommended For You

About the Author: Editor