கட்டிடத்தில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் பலி..!!

பரிசில் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் தனது பெற்றோருடன் வசிக்கு இரண்டு வயது சிறுவன் அங்கிருந்து கீழே விழுந்துள்ளான்.

இச்சம்பவத்தின் போது குறித்த சிறுவனும் அவனது 19 வயது சகோதரனும் மாத்திரமே இருந்ததாகவும், சகோதரன் கவனிக்காத வேளையில் சிறுவன் அங்கிருந்து ஜன்னலுக்கால் விழுந்துள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை 14:00 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதை அடுத்து முதலுதவி படையினர் அழைக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த நிலையில் சிறுவன் Necker மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான். ஆனால் அங்கு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளான்.


Recommended For You

About the Author: Editor