மெற்றோ கொள்ளை! – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு சிறை..!!

பரிசில் மெற்றோக்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இணைந்து பல்வேறு சிறுவர்களை வைத்து கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் ருமேனியாவைச் சேர்ந்த ஒரே பரம்பரையைச் சேத்ந்த குடும்ப அங்கத்தவர்கள் எனவும், மிக திட்டமிடப்பட்டு பயிற்சிவிக்கப்பட்டு பண பைகள், தொலைபேசிகள், போன்றவற்றை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக இவர்கள் இந்த குற்றவியல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 20 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 11 தொடக்கம் 19 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் அனைவருக்கும் சிறைத்தண்டனையும் அதன் பின்னர் பிரான்சை விட்டு வெளியேற உத்ததவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor