கிளிநொச்சியில் தனிநபர் உண்ணாவிரத போராட்டம்!!

பாதுகாப்பை உறுதிப்படுத்தி, வியாபார நடவடிக்கைக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி தருமாறு கூறி கிளிநொச்சியில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை கிளிநொச்சி ஊற்றுபுலம் பகுதியில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரால் வர்த்த நிலையத்தில் இடம்பெற்றது.

அந்தவகையில் கிளிநொச்சி ஊற்றுப்புலம் சந்தியில் தேனீர் கடை நடாத்தி வருகின்ற கந்தசாமி என்கின்ற நபர், பொலிசாரின் அசமந்த நடவடிக்கைகளுக்கு எதிராகவே உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த 13.09.2019 அன்று தனது தேநீர் கடைக்குள் புகுந்து மகனை வாளால் வெட்ட முற்பட்ட ஒருவரை வாளுடன் பிடித்து பொலிசாரிடம் கையளித்த போதும் அவர்கள் போதிய அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினமும் 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர் தனது தேனீர் கடைக்குள் புகுந்து மகனை வாளால் வெட்டியதோடு கடையினையும் அடைத்து சேதமாகக்கியுள்ளனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கோரியும், அப்பகுதியில் உள்ள வர்த்தக செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அப்பகுதியில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைக்குமாறும் தெரிவித்துமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,

இந்நிலையில், ஊற்றுப்புலம் சந்தியில் வியாபார நிலையங்களை நடத்துகின்ற ஏனையவர்களும் தங்களின் வியாபார நிலையங்களை பூட்டி இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த வர்த்த நிலையம் மற்றும் நபர் மீது தாக்குதல் நடத்தும் சிசிரிவி காட்சிகளும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தின்போது ஒருவர் வெட்டு காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், பல லட்சம் பெறுமதியான சொத்துக்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாம் அவர்களை இன்று சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும், நீதிமன்றின் ஊடாக பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருவதாகவும் பொலிசார் அவர்களிடம் கூறியுள்ளனர். அதேவேளை குறித்த பகுதியில் பொலிஸ் ரோந்து நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்வதாக பொலிசார் தெரிவித்தனர்.

தமக்க ரோந்து நடவடிக்கை வேண்டாம் எனவும், இப்பகுதியில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைத்து தருமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அப்பகுதி வர்த்தகர்கள் கேரிக்கை விடுத்தனர்.


Recommended For You

About the Author: Editor