விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழப்பு!

நியுசிலாந்தில் இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

விமானத்தில் விமானி தவிர பயணிகள் இல்லை என குறிப்பிடப்படுகின்றது. மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று மாஸ்டர்டன் விமான நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இந்த விமானத்திலும் விமானி தவிர பயணிகள் இல்லை.

இந்தநிலையில் குறித்த இரண்டு விமானங்களும் விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் 2 விமானங்களும் தீப்பிடித்ததாகவும், பின்னர் குறித்த விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கியதாகவும் நியுசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் விமானிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்தநிலையில் விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நியுசிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor