முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினர் விசாரணைக்கு அழைப்பு!!

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரனை பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்பானை நேற்று(செவ்வாய்கிழமை) அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறித்த கடிதத்தை கையளித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் ‘பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதனால் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில்வசிக்கும் ஆண்டி ஐயா புவனேஸ்வரனை 24.10.2019 காலை 10 மணிக்கு இரண்டாம் மாடி, புதிய செயலக கட்டிடம், கொழும்பு 01 எனும் முகவரியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு 01 இன் பொறுப்பதிகாரியினை சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தான் அழைக்கப்பட்டுள்ளேன் என்பது தொடர்பாக தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor