விஜய் ஆண்டனி புதிய கூட்டணி!

கொலைகாரன் படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தை விஜய் மில்டன் இயக்கவுள்ளார்.

இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜய் ஆண்டனி பின்னர் கதாநாயகனாக அறிமுகமான பின்னர் பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்கள் வெற்றியைப் பெற்றுந்தந்தன.

ஆனால் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான கொலைகாரன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. த்ரில்லர் பாணியில் உருவான அப்படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கொலைகாரன் படத்தை தயாரித்த தியா மூவிஸ் பிரதீப் குமார், கமல் போஹ்ரா, தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு டையூ, டாமன் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.

கோவாவில் பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. ஒரே கட்ட படப்பிடிப்பில் படத்தை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் நடிகர்களிடம் மொத்தமாக கால்ஷீட்டை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அக்டோபர் 1ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

விஜய் ஆண்டனி நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இனைந்து அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெறவுள்ளது. 50 நாள்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor