கதாநாயகனாக ‘லெஜண்ட்’ சரவணன்!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான, சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தனது நிறுவனத்திற்கான விளம்பரங்களில் தானே நடித்துப் பிரபலமானவர் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர் ‘லெஜண்ட்’ சரவணன்.

பிரபல கதாநாயகிகளுடன் இணைந்து அவர் தோன்றிய விளம்பரங்கள் பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த விளம்பரங்களைக் கலாய்த்து பல மீம்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலானது.

எனினும் பொதுமக்களிடம் அவர் நடித்த விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தொழிலதிபராக வலம் வரும் லெஜண்ட் சரவணன் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால்பதிக்கத் தயாராகிவருகிறார்.

இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘ஜேடி -ஜெர்ரி’ ஆகியோர் இணைந்து இயக்கவுள்ள திரைப்படம் மூலமாக அவர் அறிமுகமாகவுள்ளார்.

இந்த திரைப்படம் 2020 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor