தொடருந்து ஊழியர்களின் தொடர் ஆர்ப்பாட்டம்!

கடந்த சில நாட்களாக தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. CGT-RATP தொழிற்சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தம் ஊழியர்களை அழைத்துள்ளது. டிசம்பர் 5 ஆம் திகதியில் இருந்து தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் பணி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மிகப்பெரும் அளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், டிசம்பர் 4 ஆம் திகதி 22:00 மணியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் இல்-து-பிரான்சுக்குள் தொடருந்து போக்குவரத்துக்கள் கணிசமாக பாதிக்கப்படும் என அறிய முடிகிறது.

CGT தவிர மேலும் நான்கு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு தயாராகுவதால் போக்குவரத்துக்கள் மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

CGT, FO, FSU, Solidaires உள்ளிட்ட தொழிற்சங்கம் டிசம்பர் 5 ஆம் திகதி முதல் நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor