300 ஆண்டுகள் பழமையான பள்ளியில் தீ விபத்து!

இத்தாலியில் 300 ஆண்டுகள் பழமையான பள்ளி ஒன்று தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

டூரின் என்ற இடத்தில் 1740ம் ஆண்டு குதிரையேற்றப் பயிற்சிப் பள்ளி ஒன்று கட்டப்பட்டது. தற்போது வரை நல்லநிலைமையில் இயங்கி வரும் இந்தப் பள்ளிக்கட்டடத்தை உலக பாரம்பரியத் தலமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இந்தப் பள்ளிக்கட்டடத்தில் திடீரென தீப்பிடித்தது.

காற்றின் வேகத்தில் கொழுந்து விட்டெரிந்த நெருப்பைக் கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றன.

சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டாலும் பழமையான பள்ளியின் பெரும்பாலான பகுதி தீக்கிரையானது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என்ற போதிலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Recommended For You

About the Author: Editor