கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற கடைத் தொகுதியின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்க நகைகளை வெளியில் எடுத்துவர முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சுமார் 39 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் 40 மற்றும் தங்க நகைகளை சந்தேகநபர் தனது கால்களில் மறைத்து வெளியில் எடுத்துவர முற்பட்ட போதே இன்று காலை, சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளைப் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான பயணி ஒருவர் குறித்த நகைகளை வெளியில் எடுத்து வந்து தரும்படி தன்னிடம் ஒப்படைத்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor