பரிஸ் ஒலிம்பிக் 2024 – புதிய இலட்சிணை வெளியீடு..!

2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான புதிய இலட்சிணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை பரிஸ் ஒலிம்பிக் கமிட்டி இந்த இலட்சிணையை வெளியிட்டுள்ளது. Paralympic மற்றும் Olympic medalists ஆகிய இரண்டு ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து இந்த இலட்சிணையை தயாரிக்கும் பணியை சமீப நாட்களாக மேற்கொண்டிருந்தனர்.
ஒலிம்பிக் தீபத்தினை இலட்சிணையில் கொண்டு தங்க நிறத்தில் இந்த இலட்சிணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உத்தியோகபூர்வ அறிவிப்பு என்பதால்  இதனை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இலட்சிணை நேற்று திங்கட்கிழமை 20:24 மணிக்கு (2024 ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக) வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வெளியிட்ட சில நிமிடங்களுக்குள்ளாக சர்ச்சைக்குள்ளும் சிக்கியுள்ளது.
பரிசின் அடையாளமான ஈஃபிள் கோபுரம் தொடர்பாக இலட்சிணையில் எதுவும் இல்லை என இணையவாசிகள் விசனப்பட்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor