ஹேமசிறி பெர்ணான்டோவிடம் நீண்ட விசாரணை!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகிய ஹேமசிறி பெர்ணான்டோவிடம் இவ்வாறு சாட்சியம் பெறப்பட்டதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹேமசிறி பெர்ணான்டோ மக்கள் வங்கியின் தலைவராக செயற்பட்ட காலத்தில், 2016 ஆம் 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வங்கிக்கு கணனிகளை கொள்வனவு செய்ததில் நிதிமோசடியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை (புதன்கிழமை) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor