தேர்தல் கணக்காணிப்பில் 14 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தல் கணக்காணிப்பில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தமது அமைப்பின் சார்பில் ஐயாயிரத்துக்கும் அதிகமானோரை ஈடுபடுத்தவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கண்காணப்பாளர்களுக்கான பயிற்சிகளை எதிர்வரும் ஓரிரு நாட்களில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கெபே அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 7 ஆயிரத்து 500 கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் கூறியுள்ளார்.

அபோபோல் ஜனாதிபதி தேர்தலில் 2 ஆயிரம் கண்காணிப்பார்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் குறித்த உறுப்பினர்கள், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கண்பாணிப்பகத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் தொடர்பான முறைபாடுகளை ஏற்பதற்காக அலுவலகங்களை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்