மன வளர்ச்சி குன்றிய மகளை கர்ப்பமாக்கியவர் சிறையில்.

திருகோணமலையில் மனவளர்ச்சி குன்றிய தனது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் சந்தேகநபரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த துஷ்பிரயோக சம்பவம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 39 வயதுடைய தந்தை தனது 15 வயதுடைய புத்திகூர்மை குறைந்த மகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டையடுத்து கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி கபில கால்லகே தலைமையில் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் குறித்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்