குழந்தைக்கு மதுவை கொடுத்துவிட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டவர் கைது.

தன்னுடைய குழந்தைக்கு மதுவை பருகக்கொடுத்து, தூங்க வைத்ததன் பின்னர் விபச்சாரத்துக்கு சென்றிருந்த தயாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், கடந்த 16ஆம் திகதியன்று அம்பலாந்தோட்டை நகருக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அந்த நகருக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் வசிக்கும் பெண்ணின் நடவடிக்கை குறித்து பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, அந்த வீட்டில் பெண்கள் இருவரும் ஆணொருவரும் இருந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வாடகைக்கு அந்த வீட்டை பெற்றுக்கொண்டுள்ள பெண், தன்னுடைய எட்டுவயதான ஆண் பிள்ளைக்கு மதுவை அருந்த கொடுத்துவிட்டு, தூங்க வைத்ததன் பின்னரே, இவ்வாறு விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார் என்றும், மற்றொரு பெண்ணையும் அழைத்து வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்