சிலியில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் – மூவர் உயிரிழப்பு!

சிலியில் இரண்டாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சில பகுதிகளில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வெடித்த மோதலில் சிலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) சந்தைக் கட்டடத் தொகுதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதன்போதே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, தொடரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தலைநகர் சாண்டியாகோ, சக்காபுகோ, பியூண்டே அல்ரோ மற்றும் சன் பெர்னார்டோ உள்ளிட்ட பகுதிகளில் அவசரநிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிலி ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா நேற்று அறிவித்திருந்தார்.

மேலும், மக்களின் போராட்டத்துக்கு காரணமான உயர்த்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக விவாதித்து அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் அமெரிக்கா கண்டத்தின் கடைக்கோடி மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்னஞ்சிறு அழகிய நாடு சிலி. சுமார் ஏழரை இலட்சம் பரப்பளவு கொண்ட வளமிக்க இந்நாட்டில் சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

அண்மையில் இந்நாட்டில் அரசின் நிர்வாகத்தில் உள்ள ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் பலமடங்காக உயர்த்தப்பட்டன.

இந்த கட்டண உயர்வைக் கண்டித்து சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்