பாகிஸ்தான் இராணுவத்தினர் மீது தாக்குதல்.

பாகிஸ்தான் இராணுவத்தினர் காஷ்மீர் பகுதியின் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய இராணுவம் பாகிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குப்வாரா மாட்டத்தின் தங்கார் பகுதியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீதே இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 4 முதல் 5 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

காஷ்மீரின் எல்லைப்பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


Recommended For You

About the Author: ஈழவன்