ஆரம்பமாகியது விஜய் சேதுபதி 33!

விஜய் சேதுபதியின் 33ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.

வெங்கட கிருஷ்ண ரோகநாத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களாக வலம்வந்தாலும் முதல்முறையாக விஜய் சேதுபதியும், அமலா பாலும் இப்படம் மூலமாக கூட்டணி அமைத்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு இசையமைப்பாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமலா பாலும் மற்றொரு இசையமைப்பாளராக நடிக்கிறார்.

ரொமாண்டிக் மியூசிக்கல் கதைக்களம் கொண்ட இப்படத்தை எசக்கி துரை தயாரிக்கிறார். விஜய் சேதுபதியின் 33ஆவது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை.

இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் இன்று (ஜூன் 14) தொடங்கியது.

முதற்கட்டமாக ஊட்டியில் படப்பிடிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகநாத், “மூன்று இசையமைப்பாளர்களை மையப்படுத்தி இப்படத்தின் கதை சுழல்கிறது.

விஜய் சேதுபதி, அமலா பால் மற்றும் ஒரு வெளிநாட்டு நடிகை இசையமைப்பாளர்களாக நடித்துள்ளனர். அவர்களுக்கு இடையே இருக்கும் போட்டி, காதல், அதனால் உருவாகும் பிரச்சினைகள்தான் இப்படத்தின் கதையோட்டம்” என்று தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor