ரஷ்யாவில் அணைக்கட்டு உடைவு – 15 பேர் உயிரிழப்பு.

ரஷ்யாவில் அணை உடைந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சைபிரியா பகுதியைச் சேர்ந்த தங்கச் சுரங்கம் அருகே சீபா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையே நேற்று(சனிக்கிழமை) இவ்வாறு உடைந்துள்ளது.

இதன்போது குறித்த பகுதியிலிருந்த குடியிருப்புகளில் நீர் புகுந்ததனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் தற்போது மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்