மிரட்டும் சிண்ட்ரெல்லா தமிழில் ஒரு பேய்ப் படம் !

உலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’. இந்தப் பெயரில் தமிழில் ஒரு பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.

ராய்லெட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இந்தப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீசர் நேற்று(அக்டோபர் 18) வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ராம்கோபால் வர்மா மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இணைந்து இந்த டீசரை வெளியிட்டனர். திகிலூட்டும் இசை, பயமுறுத்தும் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படம் குறித்து படத்தின் இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும் போது, “இது ஒரு பேய்ப் படம் தான். ஆனாலும் பேய்ப் படங்களுக்கென இங்கு போடப்பட்டுள்ள ஹைதர் அலிகாலத்து பார்முலாவில் இருந்து விலகி, அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு விறுவிறுப்பான படமாக ‘சிண்ட்ரெல்லா’ உருவாகி இருக்கிறது.

படத்தின் கதாநாயகி ராய்லெட்சுமிக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். இதுவரை அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படத்தில் அவரது கதாபாத்திரம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். படத்தில் சாக்க்ஷி அகர்வால் எதிர்பாராத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அவர் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் பரபரப்பை ஏற்படுத்தும். இவர்களைத் தவிர ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சிண்ட்ரெல்லா என்ற பெயர் குழந்தைகளிடம் மிகவும் பரிச்சயமானது.

இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

காஞ்சனா 2′ படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor