முடிவை மாற்றிய சனநாயக போராளிகள் கட்சி!

சனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த கட்சியினர் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவையும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் இரகசியமாக சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே தற்போது அவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவினை தெரிவிக்கும் நோக்கில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இவர்கள் கோத்தபாய ராஜபக்ச தரப்பினரை சந்தித்ததாக புகைப்படங்கள் வெளியாகியுள்ள போதும் அது இதற்கு முன்னரான காலப்பகுதியில் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Recommended For You

About the Author: Editor