கோட்டாவிற்கும் , சுதந்திர கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

கொழும்பில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர, கோத்தாபய ராஜபக்ச இருவரும் இந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர். சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தது.

இந்த நிலையில், கோத்தாபய ராஜபக்சவுடன் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்ச தனியாக அரசியல் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவது இதுவே முதல்முறையாகும்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் வகையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்கனவே உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

 


Recommended For You

About the Author: ஈழவன்