வவுனியாவில் பரிதாபமாக உ யிரிழந்த குடும்ப பெண்!! கதறும் உறவுகள்!

வவுனியா, பம்பைமடு பெரியகட்டுப் பகுதியில் நேற்று இரவு(18) இடம்பெற்ற விபத்தில குடும்ப பெண் ஒருவர் பரிதாபமாக ப லியாகியுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.

குறித்த உழவியந்திரம் பெரியகட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் திரும்ப முற்பட்டபோது கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மதகுடன் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இதன்போது கணவன் தூக்கிவீசப்பட்டதுடன், மனைவி உழவியந்திரத்தின் கீழ்பகுதிக்குள் அகப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அவசர அம்புலன்ஸ் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் சி கிச்சை பலனின்றி குறித்த பெண் பலியாகியுள்ளார். கணவன் சிறு காயங்களிற்குள்ளானார். வி பத்தில் பெரியகட்டுபகுதியை சேர்ந்த தனுசா வயது 21 என்ற ஒரு பிள்ளையின் தாயே பலியாகியுள்ளார்.

குறித்த பெண்ணே உழவியந்திரத்தை செலுத்திச் சென்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். விபத்து பூவரசங்குளம் பொலிஸார் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor