இசுறு தேவப்பிரியவின் பதவி பறிப்பு!

மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் மகரகம தொகுதி அமைப்பாளர் பதவிகளை வகித்து வந்த நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள தாம் பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor