வடமாகாண மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனை!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கணிதப் போட்டியில் வடக்கு மாகாண மாணவர்கள் அணி 2ம் இடத்தை பெற்றனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சிரேஷ்ட பிரிவு இரண்டிற்கான தேசிய மட்ட கணிதப் போட்டி  (17.10.2019) கொழும்பு மீபேயில் நடைபெற்றது.

இதில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன், ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் துரைராஜ் அபிஷாந், சுபேந்திரன் பிரணவன், கோபாலகிருஷ்ணன் கிருஷாந், இராசலிங்கம் துஷாரகன், சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஆல்ரிக்பிரசாந் நிலக்ஸன், மகாஜனக் கல்லூரி மாணவன் சத்தியலோகேஸ்வரன் தாமிரவரன், வரணி மத்திய கல்லூரி மாணவன் சிவபாதம் சிந்துஜன் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றனர்.

மேல் மாகாணம் முதலாம் இடத்தையும் தென் மாகாண அணி மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தது.


Recommended For You

About the Author: Editor